தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் மக்களை ஏமாற்றிய இராணுவம்…

யாழில்  இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்றையதினம் விடுவிக்கப்படுமென   ஜனாதிபதி அறிவித்த போதும்  இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  தமது காணிகளுக்குச் செல்ல சென்ற  காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை நேற்றையதினம்  மக்களிடம்  மீளகையளிப்பதாக   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்திருந்தார்.

அதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து  நேற்றைய தினம்   காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் அவர்களை இராணுவம் காணிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்நிலையில்  மாலை 04 மணிவரை மக்கள் காத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதன்பின் குறித்த காணிகள் இன்றைய தினம் விடுவிக்கப்படும் என  இராணுவத்தினர் தெரிவித்தனர்.தை அடுத்து, காலையில் இருந்து காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...