தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு மக்கள் கோரவில்லை..

வடக்கில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு அங்குள்ள பொதுமக்கள் யாரும் கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட  அமைச்சரவை இணைப்பேச்சாளர்  ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வலியுறுத்தி, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

இதுதொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த  அமைச்சர் ,  இவ்வாறான தேவை வடக்கு முதலமைச்சருக்கு மாத்திரமே இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கிற்கு செல்லும் போது அவர்களை சந்திக்கின்ற பொதுமக்கள், தங்களுக்கு இருக்கின்ற பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களையே கோருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் பாரிய அளவான பிரச்சினைகளாக இருப்பதாகவும், அவர்களின் காணிப் பிரச்சினை, காணாமல் போனோரின் பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டி இருப்பதாகவும்   அமைச்சர் ராஜித்த கூறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...