தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு இளைஞர், யுவதிகளின் வாழ்வு அபாயமான நிலைக்குள் உள்ளதாக கூறியுள்ளார் விஜேதாஸ ராஜபக்ஷ

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வட மாகாண சபை அதிக கவனம்  செலுத்தவில்லை என அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

வட மாகாண சபையினர் தமது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும், அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் முரண்படுகின்றார்களே அன்றி,  மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப எந்த   நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள்

அதோடு  போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பனவற்றின் பயன்பாடு பரவி வருவதால் வடக்கு இளைஞர், யுவதிகளின் வாழ்வு அபாயமான நிலைக்குள் உள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும்  இது தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் இவற்றைப் பற்றி கருத்து எதும் கூறுவதில்லை எனவும்  அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்

Comments
Loading...