Designed by Iniyas LTD
வடக்கு, கிழக்கில் போரின் போது 84 ஆயிரம் திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
வடக்கு, கிழக்கில் போரின் போது 84 ஆயிரம் திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இரண்டு லட்சம் இராணுவம் உள்ளது. அதில் வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். ஆனால் வடக்கு மாகாணத்தில் பத்து லட்சம் மக்கள் தான் இருக்கிறார்கள். இதனை வைத்து பார்த்தீர்களானால் நாம் இராணுவ ஆட்சிக்குள் அகப்பட்டிருக்கின்றோம் என்பது புரியும். அதேவேளை வடக்கு கிழக்கில் போரின் பின்னரான காலத்தில் அரசினால் பெறப்பட்ட புள்ளிவிபரத் தகல்களின்படி 84 ஆயிரம் விதவைகள் உள்ளனர். அப்படியென்றால் போரின் போது வடக்கு கிழக்கில் 84 திருமணமான ஆண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.
மேலும் யாழ் மாவட்டத்தில் ஏறத்தாள 50ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மீள குடியேற்றப்படவேண்டியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மீனவ சமுகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லவிடாது அவர்களது நிலங்களை அரசாங்கம் கபளீகரம் செய்துகொண்டு தனது உடமை என்கிறது என அவர் தெரிவித்தார்.