Designed by Iniyas LTD
வடக்கு மாகாணசபை அமைச்சு செயலாளர்கள் இடமாற்றம்
வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளை ஏப்ரல் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண கல்வி அமைச்சுச் செயலாளருக்கும், சுகாதார அமைச்சுச் செயலாளருக்கும், மீன்பிடி அமைச்சுச் செயலாளருக்கும் மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீன்பிடி அமைச்சுச் செயலாளராக இருந்த வரதீஸ்வரன் முதலமைச்சரின் செயலாளராகவும்,
கல்வி அமைச்சுச் செயலாளராக இருந்த சத்தியசீலன் மீன்பிடி அமைச்சு செயலாளராகவும்,
சுகாதார அமைச்சுச் செயலாளராக இருந்த ரவீந்திரன் கல்வி அமைச்சு செயலாளராகவும்,
சுகாதார அமைச்சுச் செயலாளராக திருவாகரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் ஏன் நடைபெற்றன என்ற விடயங்கள் தொடர்பாக பலரும் பலவாறு பேசிக்கொள்கின்றனர்.
இவை முன்னமே தீர்மானிக்கப்பட்டைவை என்றும், முன்னைய அரசசார்புச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்றும், குறித்த துறைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்றும், பலவாறு பேசப்படுகின்றது.
தனியே செயலாளர்களை மாற்றி மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வியும் இங்கே வினவப்படுகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு
வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.வினோதலிங்கம் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன்படி 24 பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.