Designed by Iniyas LTD
வடமாகாண சபை தொடர்பில் இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை
வடமாகாண சபை தொடர்பில் இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடமாகாண சபையானது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செயற்படல், தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளிநாடுகளுக்குப் பகிர்ந்து கொள்ளல், வெளிநாட்டு இராணுவத்துடன் சேர்ந்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் பாரிய பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்நோக்கியுள்ளதன் காரணமாகவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினை வடமாகாண ஆளுநர் சந்திரசிறியிடம் அரசு கோரியுள்ளது. அமெரிக்க இராணுவத்தினருடன் வடமாகாண கல்வியமைச்சர் கலந்துரையாடிமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாண பாடசாலைகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்படல், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுத்தமை, உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மத்திய அரசு கவனம் செலுத்தியதனையடுத்தே இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.