Designed by Iniyas LTD
வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள கட்டடம் மாங்குளத்தில் முதலமைச்சரால் திறந்துவைப்பு
வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள கட்டம் இன்று மாங்குளத்தில் வடமாகாண முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
வடக்கு மாகாண சபை மாங்குளத்திற்கு வரவேண்டும் என்ற மக்களது அவாவை நிறைவேற்றும் முதலாவது நிகழ்வாக வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள கட்டம் மாங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்டு இன்று மாலை வடமாகாண முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
கடந்த ஆண்டு முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ ஜங்கரநேசன் அவர்களது தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு பணிகள் நிறைவுசெயயப்பட்டுள்ள நிலையில் தற்போதைய வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களில் அழைப்பில் வடமாகாண முதலமைச்சர் க வி விக்னேஸ்வரன் அவர்களால் இன்று நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் வடக்குமாகாண வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் இந்திரராஜா முதலமைச்சர் அமைச்சின் செயலாளர்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்