Designed by Iniyas LTD
வட்டுவாகல் ஸ்ரீ கடற்படை தள நில அளவை இடைநிறுத்தம்!
முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள பிரதேசம் தொடர்பில் அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மாணத்தின் பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதுவரை நில அளவைகள் இடை நிறுத்துவது எனவும் மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மாணம்.
வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள 617 ஏக்கரையும் கடற்படையினரின் பாவனைக்காக அபகரிக்கும் நோக்கில் அப்பிரதேசத்தினை அளவீடு செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிக்குத் தீர்வுகானும் நோக்கில் நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில்உரையாற்றிய அரச அதிகாரி குறித்த பிரதேசத்தினை கடற்படையினர் தமது பயன்பாட்டிற்கு வழங்குமாறு கோருவதோடு அவ்வாறு வழங்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு தகுந்த தற்போதைய சந்தைப் பெறுமதி நட்ட ஈடாக வழங்குவதாக கடற்படையினர் வழங்குவதாக தெரிவிப்பதாக கூறியதோடு காணி உரிமையாளர்கள் மற்றும் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினை கூறுமாறும் கோரினர்.
இதனை அடுத்து கருத்து வெளியிட்ட நில உரிமையாளர்கள் தமது பூர்வீக நிலமே தம்க்கு வேண்டும் . எனவும் தமது பூர்வீகமான கேந்திர முக்கியத்துவம் மிக்க இந்த இடத்தினை மீளப் பெற்றுத்தர வேண்டிய அதிகாரிகள் அதற்கு நடவடிக்கை எடுக்காது எமது நிலத்தை கடற்படைக்கு பெற்றுக் கொடுப்பதில் அக்கறை செலுத்துகின்றனர்.
இவ்வாறு இந்த இடத்தினை முதலில் சுவீகரிக்கும் கடற்படையினர் எதிர் காலத்தில் இதனை அண்டி துறைமுகம் எனவும் பாதுகாப்பு வலயம் எனவும் மேலும் திலங்களை அபகரிப்பதன் மூலம் இப் பிரதேசத்தில் ஓர் பாரிய நெரிசலே ஏற்படும்.
இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளிற்கும் மக்களின் மீள் குடியேற்றத்திற்காகவும் எவ்வளவோ நிலத்தேவைகள் உள்ளபோது படையினரின் பயன் பாட்டிற்காக இவ்வளவு அதிக நிலத்தினை இவ்வாறான வளமான பிரதேசத்தில் வழங்க முடியாது.
குறிப்பாக மாவட்டத்தில் ஓர் பல்கலைக் கழகம் அமைக்க எதிர் பார்க்கப்படும் சூழலில் அதற்காக நகரை அண்டிய பகுதியில் 100 ஏக்கர் நிலத்தினை பெறுவதில் பெரும் நெருக்கடி எதிர் நோக்கப்படும் நிலையில் கடற்படையினருக்கு 617 ஏக்கரை வழங்க முடியாது. எனவும் கருத்துக்கள் பலமாக முன்வைக்கப்பட்டது.
மகிந்த காலத்தில் இவ்வாறான பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டதன் விளைவாகவே நாம் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களித்தோம் . அதனால் மைத்திரி அரசு இது ஓர் நல்லாட்சி அரசு எனச் சொல்கின்றது.
மேடைக்கு மேடை வாய்ப்பேச்சில் கூறும் நல்லாட்சி அரசு இந்த மக்களிற்காக சாதித்தது என்ன . வடக்கில் நில அளவீடுகள் தொடர்பிலோ அல்லது சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பிலோ எதுவுமே திரியாது . என பிரதமர் கூறுகின்றார் அவ்வாறானால் மாவட்ட அரச அதிபரா படையினருக்கு நிலம் அபகரிக்க முயல்கின்றார் எனவும் கோரினர்.
இதேவேளை இங்கு கூடியவர்களில் இரு சிங்கள இணத்தைச் சார்ந்த நில உரிமையாளரும் சீன நாட்டவரும் தமது நிலத்திற்கான முழுமையான பெறுமதியினை வழங்கினால் தாம் அந்த நிலத்தை வழங்குவதாக தெரிவித்தனர்.
மேற்படி சந்திப்பில் மாவட்ட அரச அதிபர் , பிரதேச செயலாளர் , காணித்திணைக்கள உத்தியோகத்தர்கள் , நில அளவைத் திணைக்களத்தினர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நில உரிமையாளர்களுடன் கடற்படையினர் ஆகியோரும் பாதுகாப்பு அமைச்சின் ஓர் அதிகாரியும் கலந்து கொண்டார்.