தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட கிழக்கு இணைந்த தமிழ் மக்களை பிரிக்காத தீர்வு மட்டுமே வேண்டும்!

showImageInStoryஎமது மக்­களின் அபி­லா­சை­களை தீர்க்­காத எந்த ஒரு­தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அது வடக்கு கிழ க்கு இணைந்­ததா­கவும் ஆனால் தமிழ் மக்­களை பிரிக்­கா­த­தா­கவும் அமைய வேண்டும் என எதிர்­க்கட்­சித்­த­லைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார்.

திரு­கோ­ண­ம­லையில் தமிழ் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­திகள் மத்­தியில் சம­கால நில­மைகள் பற்றி அவர் திங்­கட்­கி­ழமை  மாலை விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே மேற்­படி கருத்தை அவர் வெளி­யிட்டார்.

அவர் இங்கு தொடர்ந்து பேசு­கையில்..

இன்று மக்கள் மத்­தியில் ஒரு துணிவு இருக்­கின்­றது. தாங்கள் சொல்ல வேண்­டி­யதை சொல்ல வேண்டும் என்று நினைக்­கி­றார்கள். அது ஒரு நல்ல விடயம். எமது நாட்டில் இன்று எமது மக்­களோ அல்­லது வேறு எந்த மக்­களோ பயந்து வாழ்­கின்ற சூழல் இல்லை . அவர்கள் சுதந்­தி­ர­மாக சிந்­தித்து செயற்­ப­டு­கின்­றார்கள். சுதந்­தி­ர­மாக பேசு­கின்­றார்கள். இந்த நாட்டில் சட்டம் மதிக்­கப்­படும் மனித உரி­மைகள் பாத­காக்­கப்­படும் ஜன­நா­யக ஆட்­சி­முறை மற்றும் சட்ட ஆட்சி முறை நிலவும் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் இருக்­கின்­றது.

இந்த நாட்டில் இன்று இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றாக செயற்­பட்டு அதா­வது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பெரும்­ப­கு­தியும் ஐ.தே. கட்­சியும் இணைந்து ஒரு ஆட்­சியை அமைத்­தி­ருக்­கி­ன­றன.

எங்­க­ளு­டைய உத­வி­யுடன் மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்தை பாரா­ளு­மன்றில் பெறக்­கூ­டிய நி.லைமை இருக்­கின்­றது. அர­சியல் சாச­னத்தில் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்­டு­மா­க­வி­ருந்தால் அந்த அர­சியல் தீர்வு பாரா­ளு­மன்­றத்தில் முன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்­துடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும் அவ்­வாறு பெரும்­பான்­மையை பெறக்­கூ­டிய  சூழல்  பார­ளு­மன்றில் நில­வு­வ­தா­கவே நான் கரு­து­கின்றேன்.

ஒரு­கா­ல­கட்­டத்தில் கடந்த ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரும்  இவ்­வா­றான முயற்­சியை செய்தார். அந்­தக்­காலம் தமி­ழீழ விடு­தலைப் புலி­களும் செயற்­பட்ட காலம். அவர்­களின்  சம்­ம­தத்­தையும் பெற வேண்டி இருந்­தி­ருக்கும் .ஆனால் அப்­போது இவ்­வா­றான பெரும்­பான்மை பலத்தை பெறும் சூழல் பாரா­ளு­மன்றில்  அவ­ருக்கு இருக்க வில்லை. அவர் ஒரு அர­சியல் தீர்­வை­முன்­வைக்க விரும்­பி­னாலும் கூட அந்த தீர்வை நிறை­வேற்றும் வல்­லமை அவ­ருக்கு இருக்க வில்லை.. ஆனால் தற்­போது இருக்கும் அர­சாங்­கத்­திற்கு அந்த வல்­லமை இருப்­ப­தா­கவே நான் கரு­து­கின்றேன்.

அர­சியல்  சீர் திருத்­தங்கள் பாரா­ளு­மன்றில் முன்றில் இரண்டு பெரும்­பான்­மையை மட்டும் பெற்றால் போதாது.  அது அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டு­மாக விருந்தால் அந்த திருத்­தங்கள் மக்­க­ளு­டைய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும்.

பொது­வான கருத்து என்ன வென்றால் ஒரு அர­சியல் திருத்தம்  பாரா­ளு­மன்றில் முன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் நிறை­வேற்­றப்­பட்டால் அது மக்­களின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிலும் வெற்­றி­பெறும் என்று கருத்து உண்டு. அவ்­வாறு அங்­கீ­க­ரிக்­கப்­படும் என­பது பொது வான  அபி­பி­ராயம். தற்­பொ­ழுத மக்­களின் கருத்­த­றியும் ஒரு குழு செயற்­பட்டு வர­கின்­றது. அவர்கள் திரு­கோ­ண­ம­லைக்கும் வந்து மக்­களின் கருத்­துக்­க­ளைப்­பெற்­றுச்­சென்­றுள்­ளனர்.

அந்­தக்­கு­ழு­வைச்­சார்ந்த சிலரை நான் சந்­தித்து பேசி­யி­ருக்­கின்றேன். அர­சியல் தீர்வை எதிர்க்­கின்­ற­வர்­களின் எண்­ணிக்கை மிகவும் குறைவு என்ற நிலையை அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். நாட்­டைப்­பி­ரிக்­காமல் ஒரு­மித்த நாட்­டிற்க்குள்  ஒரு அர­சியல் தீர்­வுக்கு சாத்­தி­ய­மான நிலப்­பா­டுள்­ளது.

ஆன­ப­டி­யினால் எமக்கு சந்­தர்ப்பம் தான் உள்­ளது. அந்­தச்­சந்­தர்பம் நிறை­வே­று­வ­தாக இருந்தால் அர­சியல் தீர்வு என்ன வித­மாக அமைய வேண்டும். ஆட்சி முறை ஆட்சி அலகு ஆட்சி அதி­கா­ரங்கள் அதி­கா­ரங்­களை நிறை­வேற்றக் கூடிய பலத்தை ஒழுங்­கு­ப­டுத்­தக்­கூ­டிய ஒழுங்­குகள். அதி­கா­ரங்கள் மிகவும் கூடு­த­லாக இருக்­க­வேண்டும்.

சில வற்றை தவிர்த்து ஏனை­யவை மாநி­லத்­திற்கு அல்­லது மாகா­ணங்­க­ளுக்கு இருத்­தல்­வேண்டும்.தமிழ்­பேசும் மக்கள் சரித்­திர ரிதி­யாக வாழ்ந்து வந்த பகு­திகள் உள்­ள­டங்­கி­ய­தாக இருக்க வேண்டும். வட­கி­ழக்கு என்ன வித­மாக இருந்­ததோ? அவ்­வி­த­மாக வட­கி­ழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும்.நாட்டைப் பிரிக்­கும்­ப­டி­யாக நாங்கள் கேட்­க­வில்லை. ஆனால் தமி­ழர்­களைப் பிரிக்­கக்­கூ­டாது. பிரிக்­கப்­பட மாட்­டார்கள் என்ற நிலமை இருக்க வேண்டும் அவ்­வி­த­மான தீர்­வைத்தான் நாங்கள் எற்­றுக்­கொள்ள முடியும். அதனை நாங்கள் தெளி­வாக கூறு­கின்றோம். நான் ஏலவே குறிப்­பிட்­டது போன்று இவ்­வா­றா­ன­தொரு தீர்வு இந்த ஆண்­டிற்குள் வரும் என நான் நம்­பு­கின்றேன். தற்­ச­மயம் ஐ.நா. வின் மனித உரி­மைகள்  குழுவின் 31 வது கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அரசு ம் அதன்பிரதிநிதியான வெளிநாட்டமைச்சரும் அச்சபையில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் .அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளனர். 33 வது அமர்வில் எழுத்துமூல அறிக்கையையும் இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் .எனவே அந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் தீர்மானம் அரசாங்கத்தின் சார்பான உறுதி மொழிகளை அவர்கள் மதித்து நடக்க வேண்டும். அதனைச் செய்வார்கள் என்று நாம் நம்பகின்றோம்.என்றார்.

Comments
Loading...