Designed by Iniyas LTD
வட கிழக்கு நைஜீரியா மீதான தாக்குதல்களை போகோஹராம் தீவிரப்படுத்தியுள்ளது
நைஜீரியாவின் வட மேற்கு நகரான பாகாவை போகாஹராம் ஆயுததாரிகள் தாக்கி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், அந்த தாக்குதலின் போது எவ்வாறு அந்த தாக்குதலாளிகளுக்கு எதிராக வெறும் வெட்டுக்கத்திகளை மாத்திரம் பயன்படுத்தி தாம் சண்டையிட்டோம் என்பதை அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.
நைஜீரிய படையினர் தங்களின் ஆயுதங்களை கைவிட்டு, ஓடிவிட்டதாக அந்த தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற கணக்கு சரியாக தெரியவில்லை என்று பாதுகாப்பை தேடி பாகாவிலிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக இருக்கும், ஆயிரங்கணக்காக அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பாகா நகரை கைப்பற்றியதிலிருந்து, வட கிழக்கு நைஜீரியா மீதான தாக்குதல்களை போகோஹராம் தீவிரப்படுத்தியுள்ளது.