தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரித்தானிய தமிழ் மக்களுக்கான அவசர வேண்டுகோள்

மக்கள்போராட்டத்திற்குகுறியீடாகவிளங்கும்பிரித்தானியா வாழ்தமிழ் மக்கள்மீண்டும்தமதுபலத்தை நிரூபிக்கவேண்டும்  – பிரித்தானிய தமிழ்மக்களுக்கானஅவசரவேண்டுகோள் Anaithulaka Makkalavai logo

ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையை வெளிப்படுத்த ஐக்கிய நாட்டின் கண்காணிப்பில் நிலத்திலும் புலத்திலும் பொதுசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்   , மற்றும் தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும்    பெப்ரவரி 4. ஆம் திகதி சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை ஈழத்தமிழர்களின் கரிநாளாக வெளிப்படுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவிருகின்றது .

அன்றைய நாளில் மாலை 4 மணிக்கு இல 10, Downing Street முன்பாகக் தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனீவா நோக்கிய மக்கள் போராட்டம் “விடுதலைச் சுடர் ” ஆரம்பிக்கப்படவும் உள்ளது . காலத்தின் தேவை உணர்த்து தமிழீழ உணர்வுடன் பிரித்தானியா தமிழ் மக்கள், தமிழர் அமைப்புகள் , சங்கங்கள் அனைவரும் இக் கவனயீர்ப்பில் இணைந்து தமது தேசத்துக்கான  கடமைகளை செய்ய முன்வரவேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET ) ஆகிய நாம் அழைப்பு விடுகின்றோம் .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்  பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின்  பங்கு அளப்பெரியது .அந்தவகையில் தமிழீழம் மலரும் வரை நாம் ஓயாமல் எமது விடுதலைக்காக போராட வேண்டியவர்களாக நிற்கின்றோம் .மக்கள் போராட்டமே ஒரு இனத்தின் போராட்டம் . அந்த ரீதியில் 4ஆம் திகதி நடைபெறவிருக்கும் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள்    அனைத்துலகம் செவிமடுக்க ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)

Comments
Loading...