தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட மாகா­ணத்­தில் குற்­றச் செயல்­க­ளுக்­குக் கார­ணம் போதைப்­பொ­ருள் பாவ­னையே – யாழ் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றியம்

வட மாகா­ணத்­தில் அநே­க­மான குற்­றச் செயல்­க­ளுக்­குக் கார­ணம் போதைப்­பொ­ருள் பாவ­னையே என்று யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யும் தெரி­வித்­துள்­ளது.

சுழி­பு­ரம் சிறுமி றெஜினாகொல்­லப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும்  மற்­றும் போதைப் பொருள் பாவ­னைக்கு எதி­ரா­க­வும் யாழ்பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் பேர­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.

இதன்போது  பல்­வேறு கோசங்­களை எழுப்பி மாண­வர்­கள் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

காவல் துறையே நித்­தி­ரையா, காவல் துறை­யும் கய­வர்­க­ளு­டனா, வள­ரும் பயிரை முளை­யில் கிள்­ளாதே, இலஞ்­சம் வாங்­கு­வ­தில் இருக்­கும் ஆர்­வம் குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தில் இல்லை” உட்­ப­டப் பல வாசங்­கங்­க­ளு­டன் அவர்­கள் கோசங்­களை எழுப்­பியுள்ளனர்.

போராட்ட முடி­வில் ஊட­கங்­க­ளி­டம் கருத்­துத் தெரி­விக்­கும்­போது, ந்சிறுமி காட்­டு­மி­ராண்­டி­க­ளால் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். அதனை வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றோம்.என்றும்  போரை முடித்த அர­சுக்கு போதையை ஒழிக்­கத் தெரி­யாதா? எமது மண்­ணில் நடை­பெ­றும் அநே­க­மான குற்­றச் செயல்­க­ளுக்­குக் கார­ணம் கஞ்சா போதைப் பொருள் பாவ­னையே என சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்­கில் போதைப்­பொ­ருள்­கள் தாரா­ள­மா­கக் கிடைக்­கின்­றதாகவும்,  இதனை ஒழிக்க அரசாங்கம்  முன்­வர வேண்­டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு பொலி­ஸார் அச­மந்­தப் போக்­காக இருக்­கா­மல் தங்­க­ளது கட­மை­க­ளைச் செய்ய வேண்­டும். இங்கே நடக்­கும் குற்­றச் செயல்­க­ளுக்­குப் பின்­ன­ணி­யா­கப் பொலி­ஸார் இருக்­கின்­றார்­களா என்ற சந்­தே­க­மும் எழு­கின்­றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கடல் வழி­யாக அல்­லது வேறு வழி­யில் வரும் கேர­ளக் கஞ்­சாவை ஏன் நிறுத்த முடி­ய­வில்லை? என்றும்  இவ்­வாறு போதை­வஸ்­துக்­கள்  வரப்­ப­டு­வது தமிழ் மக்­களை அழிக்­கும் திட்­ட­மிட்ட சதி எனவும் யாழ் பல்கலைகழக  மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...