தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட மாநிலங்களில் பன்றிகாய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு

வட மாநிலங்களில் பன்றிகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  swine

பஞ்சாப் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஹரியாணா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பெண்கள் உள்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட 47 பேரில் 13 பேருக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...