தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள 5765 ஹெக்ரயா் நிலப்பகுதியை விடுவிக்கும்படி பிரதமர் உத்தரவு…

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள 5765 ஹெக்ரயா் நிலப்பகுதியை விடுவிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தவிட்டுள்ளார்.

அதோடு அதற்கான வா்த்தமானி அறிவித்தலை மீள பெறும்படியும் பிரதமா் கூறியுள்ளார்.

3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு  யாழ்ப்பாணம் சென்றுள்ள  பிரதமா் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்தியிருந்தார்

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி கிழக்கில் சுமார் 5765 ஹெக்ரயா் நிலப்பகுதியை வனஜீவராசிகள் திணைக்களம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அதனை அவர்கள்  மீள பெறவேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமா்  வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரியை அழைத்து , உடனடியாக தேசிய பூங்காவாக அறிவித்து பிரகடனப்படுத்திய வா்த்தமான அறிவித் தலை மீள பெறுமாறு   உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நாகா் கோவில் பகுதியில் 1237 ஹெக்ரயா் நிலமும்,   சுண்டிக்குளம் பகுதியில் 4528 ஹெக்ரயா் நிலப்பகுதியும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை தொடா்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்  விடுதலை புலிகள் காலத்தில் தான்  குறித்த பகுதிகளுக்கு சென்றிருந்ததாகவும், அங்கு எங்கே தேசிய பூங்கா இருக்கிறது? எனவும்  கேள்வி எழுப்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...