Designed by Iniyas LTD
வரிசையில் காத்திருந்து வாக்களித்த நடிகர் விஜய்..
சென்னை நீலாங்கரை புனித தோமையர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வரிசையில் நின்று நடிகர் விஜய் வாக்களித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது.
அந்தவகையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.
இந்த தேர்தலில் பிரபலங்கள் அதிகாலையே வந்து வாக்களித்தனர்.
நடிகர் அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் சென்று வாக்களித்தனர். அதேபோல் நடிகர் விஜயும் தனது வாக்குசாவடியில் சென்று வாக்களித்தார்.

வரிசையில் நின்று மக்களோடு மக்களாக வாக்களிக்க காத்திருந்த விஜயிடம் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பலர் ஆட்டோகிராப் வாங்கி சென்றுள்ளனர்.