Designed by Iniyas LTD
வலிகாமத்தின் பல பகுதிகளிலும் பொலிஸார் ரோந்துப் பணியில்…
யாழ்.வலிகாமத்தின் பல பகுதிகளிலும் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் முதல் யாழ்.ஏழாலை தெற்குப் பகுதியில் பல எண்ணிக்கையான பொலிஸார் திடீரெனக் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சந்தேகத்துக்கிடமாக வீதியால் சென்றோரை பொலிஸார் இடைமறித்துச் சோதனையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு மயிலணிப் பகுதியில் பொலிஸார் இரவிரவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அதேவேளை வலிகாமம் தெற்கின் பல பகுதிகளிலும் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் ,அங்கு கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.