தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வலிவடக்கில் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் பௌத்த விகாரைகள்…

யாழ்.வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவ ஆக்கி ரமிப்புக்குள் இருந்த சுமாா் 19 ஏக்கா் காணி இன்றைய தினம் மக்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகளே இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தங்களின்  வாழ்விடங்களை  மக்கள் சென்று பார்வையிட்ட போது  அங்கு அதிகளவான பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதோடு அரசமரங்கள் அனைத்தின் கீழும் பௌத்த விகாரைகள் அமைக்கபட்டு,அவை அனைத்தும் பௌத்த வழிபாட்டு சின்னமாக படையினரால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வலிவடக்கில் ஜே.249,ஜே.250 கிராமசேவகர் பிரிவுக்குரிய காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் மற்றும் பிரதேச சபையினர், அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...