தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மின்சாரம் தாக்கியதில் குழந்தை பலி…

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றில் மின்சாரம் தாக்கியதில்  மூன்று வயது  குழந்தை ஒன்று  உயிரிழந்துள்ளது.

நேற்றுக் காலை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...