Designed by Iniyas LTD
வல்வெட்டித்துறையில் இருந்து வவுனியா சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை
வல்வெட்டித்துறைப் பகுதியில் மூன்று மாணவர்களைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள தமது வீடுகளில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் ஒருமணிக்கு வவுனியாவிற்கு புறப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலுள்ள மாணவன் ஒருவனின் சகோதரனின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்திற்கு செல்வதாக கூறியே இந்த மூன்று மாணவர்களும் சென்றதாக பெற்றோர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள் மீண்டும் வீடுதிரும்பவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறை கம்பர்மலையை சேர்ந்தவர் என்றும் , மறைய இரு மாணவர்களும் வல்வெட்டிப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.