தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளாவின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

mullai periyarமுல்லைப் பெரியாறின் குறுக்கே அணை கட்டும் கேரளாவின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு வரும் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய வன உயிரியல் வாரியம் கேராளாவுக்கு அனுமதி அளித்திருந்தது. இதற்குத் தடை கோரி தமிழக அரசின் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனுவையும்  வரும் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, தலைமை நீதிபதி H.L. தத்துவிடம் தமிழக அரசின் வழக்கறிஞர் உமாபதி முறையீடு செய்துள்ளார்.

Comments
Loading...