Designed by Iniyas LTD
வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரும் அரசியல் கைதிகள்! அதிரடி திருப்பம்!
தமிழ் அரசியல் கைதிகள் ,தங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தால் மாத்திரமே புனர்வாழ்வுக்கு செல்ல இணங்குவதாக அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். எதிர்வரும் 10 நாட்களுக்குள் தமிழ் அரசியல் கைதிகளிடையே தெரிவு செய்யப்பட்ட சிலரை புனர்வாழ்வுக்கு அனுப்பத் தயார் என்று கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற புனர்வாழ்வு தொடர்பான முக்கிய கலந்துரையாடலின் போது அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் தமிழ் அரசியல் கைதிகளிடையே மூவர் மட்டுமே புனர்வாழ்வு பெற தகுதியுடையவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு மீது ஒரு வழக்கன்றி பல வழக்குகள் பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த சங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், இந்தச் செயற்பாடு முற்றுப் பெற்ற பின்னரே புனர்வாழ்வு என்ற அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.