தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொலைக்குற்ற வழக்கு தொடுக்குமானால் இந்திய-இத்தாலிய உறவு பாதிக்கும்! எச்சரிக்கிறது இத்தாலி

130314093602_italy_india_marines_304x171_afpஇந்திய மீனவர்கள் இருவரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய மரைன்ஸ் படையினர் இருவர் மீது கடற்கொள்ளை ஒழிப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்தியா வழக்கு தொடுக்குமானால் இத்தாலிய அரசாங்கத்துடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா கொண்டுள்ள உறவு பாதிக்கப்படும் என இத்தாலி எச்சரித்துள்ளது.

கடற்கொள்ளை ஒழிப்புக்கான படையணியைச் சேர்ந்த இந்த இரண்டு மரைன்ஸ் படையினரும் 2012 பெப்ரவரியில் இந்தியக் கடலோரம் அருகே இரண்டு இந்திய மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என தவறாக நினைத்து சுட்டுவிட்டனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தப் படையினர் மீது கடற்கொள்ளை ஒழிப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு முன்னெடுக்கப்படும், ஆனால் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என இந்தியா சென்ற வாரம் கூறியிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இம்மாதம் பிற்பகுதியில் இந்திய உச்சநீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலியர்கள் இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளார்கள் என்றாலும் இவர்களால் இந்தியாவுக்கு வெளியில் செல்ல முடியாது.

Comments
Loading...