Designed by Iniyas LTD
வழிப்பறியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர்
வழிப்பறியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் உள்பட 2 பேரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் சிங்கபெருமாள். சிகரெட் மொத்த வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த ஜனவரி மாதம் பெங்களுருவில் இருந்து மதுரைக்கு சிகரெட் பண்டல்களை வேனில் எடுத்து வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே வரும் போது காவல் ஆய்வாளர் கோபிநாத் பாண்டியன் வேனை மறித்து, 1 லட்ச ரூபாயை பறித்து சென்றுள்ளார். இது குறித்து சிங்கபெருமாள் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோபிநாத் பாண்டியனை அம்மைநாயக்கனூர் போலீசார் கைது செய்தனர்.
இதனிடயே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெங்களூருவில் இருந்து சிகரெட் பண்டல்கள் ஏற்றி சென்ற வேனை மறித்து, 34 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்மகும்பல் ஒன்று பறித்து சென்றது. இது தொடர்பாக மதுரை ஜீவா நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைதான இருவரையும் சம்பந்தபட்ட போலீசார் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்