Designed by Iniyas LTD
வவுனியாவில் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 4 பேர் காயம்
வவுனியா குழுமாட்டுச்சந்தியில் நேற்று (30.11.2016) இரவு 9.00மணியளவில் ஏற்ப்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் வேப்பங்குளத்திலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த முச்சக்கரவண்டியும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண் உட்பட நால்வர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இவ் விபத்து தொடர்பாக மேலதிக தகவல்களை அறியமுடியாது உள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் ஒரு முச்சக்கரவண்டியிலிருந்து புகையினை பக்கட் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பாக பொதுமகன் ஒருவரிடம் வினவியபோது,
பாரிய பாட்டு சத்தத்துடன் வேகமாக முச்சக்கரவண்டியோன்று சென்று கோண்டிருந்தது. தீடிரேன பாளார் என ஒரு சத்தம் கேட்டது. திரும்பிபார்த்தால் இரு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளாகி ஒரு முச்சக்கரவண்டி தடம்பிரண்டு கிடந்தது. உடனே பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தாக தெரிவித்தார்.