Designed by Iniyas LTD
வவுனியாவில் ஆயுதங்களுடன் நின்ற ஐவர் கைது..
வவுனியாவில் ஆயுதங்களுடன் நின்ற ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பூப்புகார் மயானத்திற்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
அங்கு அலவாங்கு, மண்வெட்டி, கோடாலியுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த ஐவரை பொலிஸார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணையின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.