Designed by Iniyas LTD
வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே வாள் வெட்டு மோதல்
வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று வவுனியா, குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு இளைஞர் குழுக்களிடையே காணப்பட்டு வந்த பகைமையே நேற்று கைகலப்பாக மாறியதற்கான காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.குருமன்காடு பகுதியைச் சேர்ந்த தபோதரன் தினேஸ்குமார் (வயது 25), மணியரசன் ரமணராஜ் (வயது 25) ஆகிய இருவருமே வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, யாழ். திருநெல்வேலி கலட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 46 வயதான குடும்பஸ்தர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுதுமலை, ஐங்கரன் வீதியைச் சேர்ந்த எஸ்.இராஜகாந் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடக்கில் இளைஞர் குழுக்களிடையே வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளமை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.