தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது.

images

வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் வசித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர்தாயகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த கைதும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் வவுனியா நகர்ப்பகுதியில் வைத்து லோகநாதன் என்ற குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு ஸ்ரீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான 8 அகவை லோ. பாரதி கண்ணன் மற்றும் 6 அகவை லோ. கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் கைது தொடர்பாக எந்தவித மேலதிக தகவல்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் சுற்றிவளைப்பு தேடுதல்களினால் கிளிநொச்சி முல்லைமாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வேறுமாவட்டங்களில் வசித்துவரும் நிலையிலும் அவர்கள் கைது செய்யப்படுவது தற்போது தொடர்கதையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் செய்வதறியாது சொல்லணா துயரில் மூழ்கியுள்ளனர்.

Comments
Loading...