தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் .

thu

யாழ்ப்பாணணம் நாவலர் வீதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த 26 அகவையுடைய கணேஸ் ருக்‌ஷன் என்பவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான தொடரூந்து பாதை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளரான இவர் யாழ்.நகரின் நாவலர் வீதியிலுள்ள கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது சக பணியாளர்கள் 9 பேருடன் உயிரிழந்த நபரும் குறித்த கட்டடத்தில் வசித்து வந்திருந்ததாகவும் நேற்றிரவு மது போதையில் அனைவரும் இருந்ததாகவும் இதனால் எழுந்த மோதலே கொலையில் முடிந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டு இங்கிருந்த  பொருட்கள் தீக்கிரையாக்கியுள்ளன. மேலும் இது கொலையாக இருக்கலாம் என சிறீலங்கா காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர் .மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments
Loading...