Designed by Iniyas LTD
வவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!
வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக தெரிவித்து பல லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே பொலிஸார் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறியே குறித்த நபர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.