Designed by Iniyas LTD
வவுனியாவில் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..
வவுனியாவில் இன்று அதிகாலை டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்தகவலை வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாசெட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜெகதீஸ்வரன் (ரமேஷ்) என்கின்ற 43 வயதுடைய ந்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியா மணிப்புரம் பகுதியில் வாகனத்திலுள்ள மண்ணை பறித்துவிட்டு உயர்த்திய பெட்டியுடன் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது வீதியிலிருந்த மின்கம்பத்தில் பெட்டி முட்டியபோது மின்சாரம் சாரரதியை தாக்கியமையால், .சம்பவ இடத்திலேயே வாகனச்சாரதி உயிரிழந்துள்ளார்.
பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.