தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பொலிஸாரின் அசமந்தப்போக்கு – மக்கள் விசனம்..

யாழ் போதனா வைத்தியசாலையின் முன்பாக இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு மோட்டார் சைக்கிளகள்  களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் முன்பாக இடம்பெறும் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமாக செயல்படவிலை என மகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக  கள்வர்கள் சாதாரணமாக தமது கைங்கரியத்தை தொடர்வதாக மக்கள் கூறியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியை பார்வையிட்டு வெளியேறியவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வியாழக்கிழமை களவாடப்பட்ட நிலையில்,

வெள்ளிக்கிழமை காலையிலும் மற்றுமோர் மோட்டார் சைக்கிள் அதே இடத்தில்  களவாடப்பட்டுள்ளது

இதேவேளை  களவாடப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள்கள்  3 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...