Designed by Iniyas LTD
வவுனியா – திருகோணமலை வீதியில் பாரிய விபத்து – 6 பேர் படுகாயம்..
வவுனியா – திருகோணமலை வீதியில் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தபோதே குறித்த வான் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டுள்ளது.
வானில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


