தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுணதீவு சோதனைச் சாவடி மீதான தாக்குதல் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம்…மேலும் ஒருவர் கைது…

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடி மீதான தாக்குதல் தொடர்பான விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் வவுணதீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் ஜக்கட் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த தேடுதல் வேட்டையில் மோப்பநாய் உதவியுடன் மேற்படி ஜக்கட் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் போராளிகள் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...