தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவு.விபுலானந்தா பாடசாலையில் தற்கொலை அங்கி மீட்பு

வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும், அலைபேசி சார்ஜரும் நேற்று (22)மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.anki

வவுனியா விபுலானந்தா பாடசாலையின் வளவில் புதியக் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஒப்பந்தக்காரர்களால், மேற்கொள்ளப்பட்டன. நிலத்தை ஆழமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே அந்தப் வெடிப்பொருட்களை அவர்கள் கண்டுள்ளனர்.

இதுதொடர்பில், வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

Comments
Loading...