Designed by Iniyas LTD
‘புதிய அரசியல் சக்தி’ எதிர்வரும் 08ஆம் திகதி வெளியீடு – பவித்ரா வன்னியராச்சி
கூட்டு எதிர்க்கட்சியின் ‘புதிய அரசியல் சக்தி’ எதிர்வரும் 08ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய சக்தியின் ஆரம்ப கூட்டத்தை எதிர்வரும் 08ஆம் திகதி இரத்தினபுரியில் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புதிய அரசியல் சக்தியை வெளியிடுடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒரு கட்சியாக இருக்கும் அதேவேளை, ஒரு கூட்டமைப்பாக காணப்படும் எனவும் பவித்ரா வன்னியராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.