தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வாகன விபத்தில் மாணவர்கள் இருவர் படுகாயம்!

201503220448526180_dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_secvpf-720x480எம்பிலிபிட்டிய மொரக்​கெட்டிய பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். 13 மற்றும் 14 வயதுடைய மாணவர்களே இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாணவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மணலேற்றிச் சென்ற டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களே காயமடைந்துள்ளதுடன் டிப்பர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Comments
Loading...