தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வாக்களிக்க வேண்டும் என ஒரு வாரத்தில் அறிவிப்போம் – மாவை

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு வாரத்தில் பகிரங்கமாக அறிவிப்போம் அதேவேளை மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாரை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் மகாணசபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்களுக் கிடையிலான ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (18) ஆலையடிவேம்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் நடைபெற்ற பத்திரிகை மகாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.unnamed

அவர் தொடர்ந்து பேசுகையில்,

மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதின் அடிப்படையில் நாங்கள் இந்த கருத்து கணிப்பு ஒன்றை திரட்டி மிகைவிரைவில் தலைவர் சம்மந்தன் மருத்துவ பரிசேதனையில் இருந்து வந்ததும் எல்லோரும் சேர்ந்து கூட்டாக ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிவிப்போம் .

அதேவேளை எங்களுடைய மக்களுடைய வேண்டுகோளின்படி அனைவரையும் வாக்குகளை அளிக்கும்படி வேண்டுகோள் விடுப்பதுடன் வாக்களிப்பதறகு உரிய சந்தர்ப்பமாக எல்லோரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை அளிபது ஜனநாயக கடமை என்று அதற்கு உழகை;குமாறு கருத்துக்களை எடுத்துள்ளோம்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விடயத்தை ஒரு வாரத்தில் முடிவெடுத்து பகிரங்கமாக அறிவிப்போம் என்றார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம்  கிழக்கு மாகாண சபை அம்பாரை மாவட்ட உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த.கலையரசன், ரொலிவின் செலயாளர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்து கெண்டனர்.

Comments
Loading...