தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வாயினுள் மின்கலம் வெடித்து குழந்தை படுகாயம்!

showImageInStoryஒரு வயது குழந்தையின்  வாயினுள் மின்­க­ல­மொன்று (பற்­றரி) வெடித்­ததால் அந்த குழந்தை படு­கா­ய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த விப­ரீத சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஹெனான் மாகா­ணத்தில் ஸின்யாங் நகரைச் சேர்ந்த ஸுவான் ஸுவான் என்ற மேற்­படி பாலகி, சம்­பவ தினம் தனது பாட்டா மற்றும் பாட்­டியின் பரா­ம­ரிப்பில் வீட்டில் இருந்­துள்ளார்.

இதன் போது மின்­க­ல­மொன்றை கண்­டெ­டுத்த பாலகி, அதை தனது பாட்டா புகை­யிலைக் குழலை வாயில் வைத்து புகை­வி­டு­வது போன்று வாயில் வைத்து பாவனை செய்­துள்ளார். இதன் போது அந்த மின்­கலம் வெடித்­துள்­ளது.

இதனால் பால­கியின் வாயில் பாரிய துவா­ர­மொன்று எற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்த சம்­பவம் இடம்­பெற்று 9 மணித்­தி­யாலம் கழித்தே இந்த விப­ரீதம் தொடர்பில் பாட்­டாவும் பாட்­டியும் அறிந்­துள்­ளனர்.

அதிர்ச்­சி­ய­டைந்த அவர்கள் உட­ன­டி­யாக பால­கியை வுஹான் சிறுவர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர். இத­னை­ய­டுத்து மின்­கலம் வெடித்­ததால் பால­கியின் தொண்டை வரை ஏற்­பட்­டி­ருந்த காயத்­துக்கு இரு மணி­ நே­ரத்தை செல­விட்டு மருத்­து­வர்கள் சிகிச்­சை­ய­ளித்­தனர்.

அந்தப் பால­கியின் உணவுக் குழாய்க்குள் மின்­க­லத்­தி­லுள்ள இர­சா­யனப் பொருட்கள் சென்­றி­ருக்­கலாம் என அஞ்சி பரி­சோ­த­னை­களை மேற்­கொண்ட மருத்­து­வர்கள், அதிர்ஷ்டவசமாக பாலகியின் வயிற்றுக்குள் அந்த இரசாயனங்கள் இருப்பதற்கான எதுவித அடையாளமும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...