Designed by Iniyas LTD
விக்கி தமிழ் மாநிலத்தை அமைக்கிறார்! ஹெல உறுமய
வட மாகாணசபை தமிழ் மாநிலமொன்றை அமைக்க முயற்சித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
சமஸ்டி மாநிலம் என்ற போர்வையில் தனித் தமிழ் மாநிலமொன்றை அமைப்பதற்கு வட மாகாணசபை முயற்சித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையின் நடவடிக்கைகள் இன சமூகங்களுக்கு இடையில் பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபையின் மொழி தொடர்பான யோசனை அரசியல் சாசனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
