Designed by Iniyas LTD
விசுவமடுவில் கடை தீ விபத்துக்குள்ளாகியுள்ளது
பரந்தன் பிரதான வீதி விசுவமடுவில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் தீபிடித்து எரிந்ததில் கடைத்தொகுதி பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
துரித கதியில் தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதால் அப்பகுதியில் எற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கடை உரிமையாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு தர்மபுரம் பொரிஸார் சென்று விசரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீச்சம்பவம் காரணமாக விசுவமடு நகரம் முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக இப்பகுதி இருப்பதோடு தீச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு மிக அருகாமையில் எரிபொருள் நிரப்புநிலையம் ஒன்று இருப்பதனால் தீ தொடர்ந்தும் பரவியிருந்தால் அப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.