Designed by Iniyas LTD
விசுவமடு வர்த்தகர் ஸ்ரீ குற்றப்புலனாய்வுத் துறையால் கைது!
விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த ஸ்ரீ குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அயர்ப்படுத்தப்பட உள்ளார்
இருப்பினும் குறித்த சம்பவத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கையில் எடுத்துள்ளமையால் குறித்த குற்றச்சாட்டு சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.