Designed by Iniyas LTD
விஜயதாரணிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயதரணி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இன்று ஆஜராக நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று விஜயதாரணி ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து விஜயதாரணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.