Designed by Iniyas LTD
விடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக இடம்பெறவில்லை – தமிழக மீனவர்கள்….
இலங்கை கடற்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து போது எந்தவொரு கடத்தல்கார்களும் உள்ளே நுழைய முடியவில்லை என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மை காலமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையில் போதைப்பொருள், தங்கம், கேரள கஞ்சா உள்ளிட்டவைகள் அதிகளவில் கடத்தி வரப்படுகின்றன.
கடந்த 10ம் திகதி இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 200 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவினை தமிழக பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர். கடல் மார்க்கமாக இவை கடத்தி வரப்பட்டன.
இந்த விடயம் குறித்து ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில். “கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் சர்வதேச அளவில் இலங்கை வரும் விமானங்களில் தங்கம், கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மூலமும், படகுகள் மூலமும் கொண்டு வரப்படுகின்றதாகவும்,
சமீபகாலமாக விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமானதால் மீண்டும் கடல் மார்க்கத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கடலோர கடத்தல் தொடங்கி இருக்கின்ரதாகவும், இதனால் இனி மீனவர்களுக்கு தொல்லைகள் தொடங்கிவிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இலங்கை கடற்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த கடத்தல்காரனும் உள்ளே நுழையமுடியவில்லை என்பதோடு.
எந்த அந்நிய சக்திகளும் வரமுடியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.