தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன் – விஜயகலா மகேஸ்வரன்..

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என யாழில் இடம்பெற்ற   நிகழ்வு ஒன்றில் உரையாற்றியிருந்தார்.
 இதனால் அவர் தனது  இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த நிலையில் , அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது.
இந்த நிலையில் நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன் என்றும், . தான் கூறிய கருத்தை விலக்கிக் கொண்டு தனது கௌரவத்தையும் மரியாதையையும் இழக்கமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள் என்பதைத்தான் , தான் வெளிப்படுத்தினேன் என்றும் .
அப்போது வல்லுறவு, சிறார் வல்லுறவு, போதைப்பொருட்கள், பாலியல் துன்புறுத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை என்பதை தான் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இப்போது அந்த அவல நிலைக்குள்  நாம்  தள்ளப்பட்டுள்ளமை  தான்  வெளிப்படுத்தியது மற்றவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தால் அது என்னுடைய தவறு அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Comments
Loading...