தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விபத்துக்களைக் குறைக்க மற்றுமொரு பொலிஸ் நடவடிக்கை இன்று அறிமுகம்

வாகன விபத்துக்களை குறைத்து ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் மற்றொரு படிமுறை இன்று (23) முதல் பொலிஸ் மா அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் சிவில் உடையணிந்த பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களில் சென்று வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்பின்னர் அடையாளம் காணப்பட்ட சட்டவிதிகளை மீறும் சாரதிகள் குறித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது

Comments
Loading...