Designed by Iniyas LTD
விமான கண்காட்சி சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது
ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனையொட்டி நடைபெற்ற விமான சாகசக் காட்சிகள் பார்வையாளர்ளை வெகுவாக கவர்ந்தது. 
பல்வேறு நாடுகளை சேர்ந்த 500 நிறுவனங்களின் விமானங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனால் விமான கண்காட்சியை காண உலகம் முழுவதிலிருந்தும் பார்வையாளர்கள் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர். இந்த கண்காட்சியில் பல்வேறு புதிய வகை தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு வர்த்தக ரீதியான விமானங்கள் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியையொட்டி, விமானிகள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். இது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று முன் தினம் தொடங்கிய இந்த விமான கண்காட்சி, வரும் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.