தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விம்பிள்டன் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் ரஃபேல் நடால், ஃபெடரர் முன்னேற்றம்

natalவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், ரபேல் நடால் ஆகிய முன்னணி வீரர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 10-ஆம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் நடால், பிரேசிலின் தாமஸ் பெலுச்சி-யை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில், நடால் 6-4, 6-2, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றியை வசமாக்கினார்.

 மற்றொரு போட்டியில் இரண்டாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், போஸ்னியா நாட்டு வீரர் டெமீர் (DAMIR DZUMHUR) எதிர்த்து விளையாடினார். ஃபெடரரின் ஆதிக்கமே மேலோங்கியிருந்த இந்தப் போட்டியில் 6-1, 6-3, 6-3 என்ற நேர்செட்களில் அவர் வெற்றி பெற்றார்.

Comments
Loading...