தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு செரினா, ஷரபோவா தகுதி!

Serena_Williamsவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரினா, ஷரபோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தொடரின் முதல் நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஹங்கேரியின் டிமா பபோஸ்-யை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 6-4, 6-1 என்ற செட்களில் செரினா எளிதில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுடன் , நெதர்லாந்தின் ஹொகன்கேம்ப் (HOGENKAMP) பலப்பரீட்சை நடத்தினார். இப்போட்டியின்  தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா, 6-3, 6-1 எ‌ன்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Comments
Loading...