தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வியாபாரிகள் மீது போலீசார் தாக்குதல் – பழனியில் சம்பவம்

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.  pzn

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது.

அப்பொழுது மின் இழுவை ரயில் நிலையம் முன்பு இருந்த மூன்று கடைகளை அகற்ற அதிகாரிகள் முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், கடைகளை அகற்றக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   இதை அடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
Loading...