Designed by Iniyas LTD
பாலில் 68% கலப்படம் – ஹர்ஷவர்தன்
நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் பாலில், 68 சதவிகித பால் தரமற்றதாக உள்ளதென மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 
மக்களவையில், கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், உணவுப்பொருள் ஒழுங்குமுறை அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக கூறினார். பாலில் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கலப்படம் செய்யப்படுவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் எந்த அளவுக்கு கலப்படம் உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார். விரைவில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் பால் உற்பத்தியாகும் இடத்திலிருந்து, விநியோகம் செய்யப்படும் இடம் வரை எங்கெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை கண்டறியும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.